செவி அறுவைச் சிகிச்சைக்கு உதவி கோரும் குடியாத்தம் சிறுவன்
சென்னை: விபத்தில் காதின் முக்கியப் பகுதியான காக்ளியார் பாதிக்கப்பட்டு, தற்போது காக்ளியார் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 6 லட்சம் பணத்தைத் திரட்ட முடியாமல் தவித்து வருகிறான் குடியாத்தத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் பாபு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகன் பாபு. 8 வயதான இச்சிறுவன் விபத்து ஒன்றில் சிக்கி, இவனது காதின் காக்ளியார் பகுதி பாதிக்கப்பட்டு காது கேட்காத நிலையை எட்டியுள்ளான்.
இதையடுத்து சென்னையில் உள்ள மெட்ராஸ் இஎன்டி ஆய்வக் கழக மருத்துவமனையில் இவனை அனுமதித்து பரிசோதிக்கப்பட்டது.
அங்கு நடந்த ஆய்வுகளின் இறுதியில், சிறுவன் பாபுவுக்கு உடனடியாக காக்ளியார் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சைக்கு தோராயமாக ரூ. 6 லட்சம் வரை தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டத் தடுமாறி வருகிறது பாபுவின் குடும்பம். இதுவரை ரூ. 65,000 மட்டுமே திரட்டியுள்ளனர்.
எனவே தாராள மனம் படைத்தவர்கள் சிறுவன் பாபுவின் மீத கருணை கொண்டு நிதியுதவி அளிக்குமாறு கோரியுள்ளார் பாபுவின் தாய் மாமன் பாஸ்கரன்.
சிறுவனுக்கு உதவி செய்ய வேண்டுவோர் கீழ்க்கண்ட முகவரிகள், தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்..
வினோத் ராஜகோபால்
போன்: 91-44-66123040
மொபைல்: 91-9600036774
இ-மெயில்: [email protected]
சென்னை இஎன்டி ஆய்வு கழக மருத்துவமனை
தொலைபேசி எண்கள் -24311411, 24311412, 24311413, 24311414, 24311415.
தொடர்பு கொள்ள வேண்டிய மருத்துவர்கள்:
டாக்டர் எஸ். ஆனந்த்குமார், டாக்டர் கிரண் நடராஜன், ஆர்.ரஞ்சித் (ஆடியாலஜிஸ்ட்).
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications