கொலை வழக்கு: விவசாயியின் கருணை மனு ஏற்பாடு - வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்
டெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈரோடு விவசாயியின் கருணை மனுவை மத்திய அரசு ஏற்று அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றி, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் வகையில் குறைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த நாகமலை கவுண்டர், அவரது மனைவி பொன்னுத்தாய், மகன்கள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி, மகள் செல்வி ஆகிய 5 பேர் கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டனர்.
சொத்து தகராறில் இவர்களை கொன்றதாக நாகமலை கவுண்டரின் மருமகன் கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர். இவர் விவசாயி ஆவார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1997ம் ஆண்டு கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, கோவிந்தசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார் கோவிந்தசாமி. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
அதில், கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்து, அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், இந்த மனுவை தூக்கி கிடப்பில் போட்டு விட்டார்.
தற்போது இந்த மனுவுக்கு ப.சிதம்பரம் உயிர் கொடுத்து, குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி, வாழ்நாள் முழுவதும் கோவிந்தசாமி சிறையில் கழிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கோவிந்தசாமியின் உயிர் தப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications