For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் செம்மொழி மாநாடு - வரவேற்புக் குழு, ஊர்வலக் குழு அமைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான வரவேற்புக் குழு, ஊர்வலக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறி்ப்பு:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப்பணிகளை துரிதமாகவும், செம்மையாகவும் நிறைவேற்றும் வகையில் வெவ்வேறு குழுக்களை அமைப்பது அவசியம் என முதல்-அமைச்சர் கருணாநிதி முடிவு செய்து அதன் அடிப்படையில் பின்வரும் குழுக்களையும் அமைக்க ஆணையிட்டு உள்ளார்.

வீராசாமி தலைமையில் வரவேற்புக் குழு...

அதன்படி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. துணைத்தலைவர்களாக அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், ஒருங்கிணைப்பாளராக அரசு பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் இடம்பெற்று உள்ளனர்.

உறுப்பினர்களாக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி.

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி மேலாண்மை இயக்குநர் வேணு சீனிவாசன், மதுரை தியாகராயா மில்ஸ் தலைவர் கருமுத்து கண்ணன், கோவை ராஜஸ்ரீ சுகர்ஸ் தலைவர் ராஜஸ்ரீ பதி, கோவை கிருஷ்ணராஜ் வாணவராயர்.

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தீனபந்து, அசோக்வர்தன் ஷெட்டி, ராஜிவ் ரஞ்சன், டாக்டர் பு.உமாநாத் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

நேரு தலைமையில் ஊர்வலக் குழு...

மேலும், மாநாடு தொடர்பாக மிகப் பிரம்மாண்டமான அளவில் ஊர்வலம் நடத்திடவும் இது தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காகவும் ஊர்வலக்குழுவினை அமைத்தும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டு உள்ளார்.

இதன் தலைவராக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு. துணைத்தலைவர்களாக வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதன், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரிய இணைத்தலைவர் செல்லமுத்து, அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சி.காமராஜ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

உறுப்பினர்களாக தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையர், அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் இறையன்பு, கோவை மாவட்ட கலெக்டர் பு. உமாநாத்.

மாநாட்டு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (காவல்துறை) (நியமிக்கப்பட்ட பின்னர்) கோவை மாநகர காவல்துறை ஆணையர் பி.சிவனாண்டி, கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் பாலநாகதேவி.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பெருமாள்சாமி, கல்லூரிக் கல்வித்துறை இயக்குநர் ஜெயபாஸ்கரன் சார்லஸ், ஓவியர் மருது, அரசு கவின்கலைக்கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் (பொ) சந்துரு, அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) மனோகர், கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி முதல்வர் வெ.சந்திரசேகரன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X