கோபன்ஹேகன் மாநாடு தோற்றால் மோசமான விளைவுகள்: விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி
Subscribe to Oneindia Tamil

ஐபிசிசி அமைப்பின் தலைவரும், சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான பச்சோரி கோபன்ஹேகனில் நிருபர்களை சந்தித்த போது கூறுகையில்,
'புவிவெப்ப பிரச்னையில் இப்போதாவது சுதாரித்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஒரளவு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இப்போது இப்பிரச்னையில் கருத்தொற்றுமை ஏற்பட்டு உலக நாடுகளுக்கு இடையே உடன்பாடு காணப்பட்டால், இவ்விஷயத்தில் சமுதாயத்திற்கு நம்பிக்கை கிடைக்கும்.
இல்லையெனி்ல் இதை ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, உலகெங்கும் உள்ள ஏழைகள் தான் இந்த விளைவுகளின் மோசமான பக்கத்தை அனுபவி்ப்பார்கள்.
புவிவெப்பம் 2 டிகிரி அதிகமானால் கூட சிறிய தீவுகள் பாதிக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications