அலுவலகத்தில் தூக்கம்- கருத்துக்கணிப்பில் ருசிகர தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அலுவலக நேரங்களில் 58 சதவீதம் பேர் தூக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். 11 சதவீதம் பேர் வேலை செய்யும் போதே தூங்கி விடுகிறார்கள் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல நீல்சன் நிறுவனம் இதுகுறித்து சர்வே நடத்தியது. முழுக்க முழுக்க இந்திய நகரங்களிலேயே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்து கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தூக்கத்தால் தங்கள் அலுவலக வேலை பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். 11 சதவீதம் வேலை செய்யும்போதே மேஜையிலோ அல்லது நாற்காலியிலோ அசந்து தூங்கி விடுவதாக (Nap) தெரிவித்துள்ளனர்.

நகர்புறங்களில் உள்ளவர்களில் 93 சதவீதம் பேர் அரைகுறை தூக்கம் தூங்குபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருநாளைக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்.

நகரங்களில் வசிப்பவர்களில் 90 சதவீதத்தினர் காலையில் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு காலைக் கடன் தான் காரனமாக இருப்பதாக கூறுகின்றனர். 15 சதவீதம் பேர் வேலை நிமித்தமாக எழுத்திருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் சாலை வாகன 'சவுண்டு' தாங்க முடியாமல், தூங்க முடியாமல் விழிக்கின்றனர்.

தூங்கும் போது சுவாசம் தடைபடும் ஒஎஸ்ஏ என்ற தூக்க கோளாறால் 62 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை நீடித்தால் இதய கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+