மொரீஷியஸில் ஜூனில் உலகத் தமிழ் மாநாடு
மதுரை: மொரீஷியஸ் நாட்டில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளதாக, அந்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் அங்கிரி வீரையா செட்டியார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக, மொரீஷியஸிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 10 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் நான் ஆற்றிய பணிகளுக்காக இந்திய அரசு எனக்கு "பிரவாசி பாரதிய சம்மான் விருது' வழங்கி கௌரவித்துள்ளது.
எங்கள் நாட்டில் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக உள்ளது. மேலும், பணத் தாள்களில் தமிழ் வாசகம் இடம் பெற்றுள்ளது. நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சென்னை -மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்திய மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்களின் நலனுக்காக உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு மாநாடு, வரும் ஜூனில் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications