பா.ராஜநாராயணனின் கிருஷ்ணவேணி நூல் அறிமுக விழா
கரிசல் மண்ணைச் சேர்ந்த ராஜநாராயணன் தட்ஸ்தமிழிலும் பணியாற்றியுள்ளார்.
யதார்த்தமான எழுத்தாளர். இவரது கைவண்ணத்தில் உருவான படைப்புதான் கிருஷ்ணவேணி. இது வெறும் கதையல்ல, ஒரு சமூகத்தின் நம்பிக்கை என்று கிருஷ்ணவேணி குறித்து கூறுகிறார் ராஜநாராயணன். சமீபத்தில் இந்த நூல் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த நூலின் அறிமுக விழா நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை நெல்லை, ஹோட்டல் ஆர்யாஸில் மாலை 5.30மணிக்கு விழா நடைபெறுகிறது. சித்திரசபை சார்பி்ல் நடைபெறும் விழாவில் மூதத எழுத்தாளர், திறனாய்வாளர் தி.க.சி., மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் தொ.பரமசிவன், களக்காடு முண்டந்துறை கள இயக்குநர் ராம்குமார், எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, எழுத்தாளர் கழனியூரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பா.ராஜநாராயணன் ஏற்புரையாற்றுகிறார். வே. முத்துக்குமார் நன்றி நவில்கிறார்.













Click it and Unblock the Notifications