சென்னையில் ஆப்பிரிக்க கலைஞர்களின் சர்க்கஸ்- இன்று முதல் ஆரம்பம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் ஆப்பிரிக்க கலைஞர்கள் பங்கேற்கும் ராஜ்கமல் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் இன்றுமுதல் நடக்கின்றன.
இந்த சர்க்கசில் 45 பெண்கள், 105 ஆண்கள், 6 ஆப்பிரிக்க கலைஞர்களும் பங்கேற்று விதவிதமான சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகிறார்கள்.
அரேபியன் தீப்பந்த நடனம், யானை கிரிக்கெட் ஆடுதல், குதிரை ஓட்டம், உடைந்த பாட்டில் மற்றும் ஆணியின் மீது ஏறி நடனம் ஆடுவது, வளையங்களுடன் விளையாடும் இளம்பெண்கள், எரியும் தீப்பந்தத்தை நெற்றியில் தாங்கி பிடித்தபடி சாகசங்கள் நிகழ்த்தும் அழகி என புல்லரிக்க வைக்கும் காட்சிகள் இதில் இடம் பெறுகின்றன.
மேலும் 5 யானைகள், 5 குதிரைகள், 24 வகை செல்லப் பிராணிகள், பஞ்சவர்ணக்கிளி போன்றவையும் உள்ளன. ஆப்பிரிக்க கலைஞர்களை கொண்டு சென்னையில் சர்க்கஸ் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
சர்க்கஸ் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.30, ரூ.60, ரூ.100, ரூ.150 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. தினசரி மதியம் 1 மணி, 4 மணி, மற்றும் 7 மணி என 3 காட்சிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications