நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது - வெயில் கொளுத்தும்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூரில் ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை எரிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் வெயில் 100 டிகிரிக்கு அருகில் சென்றுள்ளது. அது எப்போது 100ஐ தொடும் என்ற பயத்தில் சென்னை வாசிகள் மிரண்டு போயுள்ளனர். பகல் நேரத்தில் யாரும் வெளியில் தலைகாட்டுவதே கிடையாது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இரவில் காற்று அதிகமில்லாததால் மக்கள் புழுக்கத்தால் வெந்து அவிகின்றனர். இந்நிலையில் நாளை முதல் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் துவங்குவதால் மே 28ம் தேதி தொடர்ந்து 23 நாட்களை எப்படி சமாளிப்பது என தமிழக மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இப்படி சமாளிக்கலாம்...
மக்கள் வெயில் உக்கிரத்தால் உண்டாகும் கொப்பளங்கள், கட்டிகள், சின்னம்மை போன்ற உஷ்னம் சம்பந்தமான நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள சில டிப்ஸ்:
டீ, காபி போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை பருகலாம். தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.
வெயில் அதிகமிருந்தால் உடலில் உள்ள நீர் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். நல்ல தளர்ச்சியான பருத்தி ஆடைகள் அணியுங்கள். இறுக்கமான ஜீன்ஸ் போன்ற ஆடைகளை தவிர்க்கவும்.
அதேபோல் ஆடைகள் லேசான வண்ணத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். லேசான வண்ணம் கொண்ட ஆடைகளில் அழுக்குபட்டுவிட்டால் துவைப்பது கடினம் என சோம்பேறி தனம் கொண்டு, கருப்பு ஆடைகளை அணிவதை தவிர்ககவும்.
வெளியே கருப்பு, உள்ளே வெள்ளை...
வெளியில் செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்து கொள்ளவும். வண்ணமயமான குடைகளை கொண்டு செல்வதை விட குடையின் வெளிபக்கம் கருப்பாகவும், உள்பக்கம் வெள்ளை நிறமாக இருக்கும் வகையிலான குடைகளை பயன்படுத்துங்கள். இது உங்களை வெயிலில் இருந்து அதிகம் பாதுகாக்கும்.
வெயில் காலம் முடியும் வரை சாப்பாட்டில் காரத்தை குறைத்து கொள்ளவும். சிக்கன் போன்ற உஷ்னத்தை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
பிறகு முக்கியமானது, தேவையில்லாமல் வெளியில் சென்று வெயிலி்ல் வறுபடுவதைத் தவிர்க்கவும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications