பெண் எழுத்தாளர் ஜோதிமணிக்கு இளைஞர் காங்.கில் பதவி
Subscribe to Oneindia Tamil
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இந்திரா என்ற பெயரில் எழுதி வரும் கரூரைச் சேர்ந்த ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு 10 பொதுச்செயலாளர்கள், 9 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் எழுத்தாளரான ஜோதிமணிக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. அவர் கரூரைச் சேர்ந்தவர். இந்திரா என்ற பெயரில் எழுதி வருகிறார். இதுவரை செயலாளர் பதவியில் இருந்து வந்தார் ஜோதிமணி.
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்து வந்த பட்டுக்கோட்டை மகேந்திரன் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications