நெல்லை பல்கலை. யில் கரிசல் திரை விழா
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, தொடர்பியல் துறை சார்பில் கரிசல் திரைவிழா நாளை தேதி துவங்குகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொடர்பியல் துறை மாணவர்கள் மனோ கிளப்பை உருவாக்கி உள்ளனர்.
மனோ கிளப் சார்பில் தொடர்பியல் துறை மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில் ஆண்டுதோறும் கரிசல் திரைவிழா என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு கரிசல் திரை விழா நாளை 3ம் தேதி தொடங்குகிறது. கரிசல் திரை விழாவின் துவக்க விழா நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
துறை தலைவர கோவிந்தராஜூ வரவேற்கிறார். துணை வேந்தர் சபாபதி மோகன் கரிசல் திரைவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார்.
ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலநது கொண்டு பேசுகிறார். கல்லூரிகளின் தலைவர் சுரேந்திரா வாழ்த்தி பேசுகிறார்.
தொடர்ந்து மதியம் ரேணிகுண்டா படக்குழுவினர் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்கிறது. ஆவணப்படம், குறும்படம், விளம்பரம், நாட்டுபுற கலை உள்பட 12 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சுமார் 50 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
4ம் தேதி காலை புகைப்பட போட்டி நடக்கிறது. புகைப்பட போட்டியை டெல்லியை சேர்ந்த புகைப்பட கலைஞர் மாதவன் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஆவண படம் குறும்படம் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. இதில் ஆவணபட இயக்குனர் செந்தமிழன், குறும்பட இயக்குனர் மாமல்லன் கார்த்தி கலந்து கொண்டு பேசிகிறார்.
இரவு கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. மாலை 3 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications