சந்திரா எழுதிய 'நீங்கிச் செல்லும் பேரன்பு' நூல் வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

Sasikumar Book Release
சந்திரா எழுதிய 'காட்டின் பெருங்கனவு', 'நீங்கிச் செல்லும் பேரன்பு' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர் சசிகுமார், எழுத்தாளர் ஷோபா சக்தி மற்றும் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டனர்.

பிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்த இந்த விழாவில், 'காட்டின் பெருங்கனவு' நூலை எழுத்தாளர் ஷோபாசக்தி வெளியிட இயக்குனர் சசிக்குமார் பெற்றுக்கொண்டார்.

நீங்கிச் செல்லும் பேரன்பு நூலை பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுத்தாளர் சமயவேல், நடிகர் ஜெய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பேசிய இயக்குநர் சசிகுமார், "சந்திரா நல்ல அறிவாற்றலும் கற்பனை வளமும் கொண்டவர், நிச்சயம் மிகச் சிறந்த படைப்பாளியாக திரையுலகிலும் மின்னுவார்" என வாழ்த்தினார்.

எழுத்தாளரும்,விமர்சகருமான மீனாகந்தசாமி, ஓவியர் மருது உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நூலாசிரியர் சந்திரா, இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ரெட்டைச் சுழி படத்திலும் பணியாற்றி வருகிறார். பத்திரிகையாளரும், முன்னணி மக்கள் தொடர்பாளருமான வி கே சுந்தரின் மனைவி இவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+