தொழில் வளர்ச்சியால் இந்திய நீராதாரங்களுக்கு ஆபத்து- நம்மாழ்வார்

Subscribe to Oneindia Tamil

Nammazhvar
திண்டுக்கல்: தொழில் வளர்ச்சியால் நாடு வளர்வதில்லை. மாறாக அழிவுதான் அதிகரிக்கிறது. இந்திய நீராதார அடிப்படைகளான தென்மாநில ஆறுகளும், வடமாநில மலைகளும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியுள்ளார்.

புவிவெப்ப மாற்றம் குறித்த சுற்றுச்சூழல் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அமைதி அறக்கட்டளை நிறுவன தலைவர் பால்பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசுகையில், 'புவிவெப்ப அதிகரிப்பு தொடர்பான கோபனேஹன் மாநாட்டில் 194க்கும் மேற்பட்ட நாடுகள் கூடி பேசி எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்தியாவில் 30 சதவீத மக்கள், கடலோர பகுதியில் தான் வசிக்கின்றனர். வெப்பத்தால் நீர் மட்டம் குறைந்து, விவசாயமும் இதர தொழில்களும் பாதிக்கும். நாட்டில் தற்போது 141 மாவட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழில் வளர்ச்சியால் நாடு வளர்வதில்லை. மாறாக அழிவுதான் அதிகரிக்கிறது. தென்மாநிலங்களில் ஆறுகளும், வடமாநிலங்களில் மலைகளும், நீராதாரத்திற்கு அடிப்படையாக உள்ளன. ஆனால் தற்போது அவை ஆபத்தில் உள்ளன.

மலைகளில், மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மழைக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டு, அனைத்து பகுதிகளும் பாலைவனமாக மாறி வருகின்றன.

காலங்காலமாக பெற்றுவந்த அனுபவத்தின் மூலமாக கிடைத்த அறிவியல் விஷயங்களை தான் முன்னோர் பின்பற்றி நமது இலங்கியங்களிலும் சொல்லி வைத்தனர்.

ஆபத்தில்லாத சுற்றுச்சூழலையும், வளமான வாழ்வையும் ஒரு சேர உறுதி செய்யும் வகையில் நிலங்களை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப பிரித்து வைத்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது எங்கு இடம் கிடைத்தாலும், பிளாட் போட்டு விற்பது, தொழிற்சாலை அமைப்பது என்ற போக்கு வழக்கமாகி வருகிறது.

விவசாயத் துறையில் கேழ்வரகு, கம்பு, சோளத்தை சாகுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு தேவையான நீரில், பத்தில் ஒரு பங்கு போதும். இதற்கேற்ப அரசு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+