தமிழ் செம்மொழி மாநாட்டில் பேச 9ம் வகுப்பு மாணவி தேர்வு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேச, காரைக்குடி மாணவி உய்யவந்தாள் (14) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காரைக்குடியில் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் உய்யவந்தாள், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பல பரிசுகள் பெற்றவர்.

திருக்குறள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்களை பிழையின்றி சரளமாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர். இதுவரை 132 மேடைகளில் சாதகம் செய்துள்ளார்.

இவர், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே 3,000க்கும் மேற்பட்ட பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை பெற்றிருந்தார்.

கட்டுரை, பேச்சில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க செய்ய வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இதன்படி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட ஆறு மாவட்டங்கள் சார்பாக, இவர் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+