திருப்பதி அன்னதானம்: மார்ச் 1 முதல் 'பஃபே சிஸ்டம்'

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரும் 28ம் தேதி சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேற்று கன்னியாகுமரி வந்தார் திருப்பதி கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'திருப்பதியில் தினமும் சராசரியாக 45 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாக்காலங்களில் அன்னதான கூடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அன்னதானம் சாப்பிடுகிறார்கள்.
கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய அன்னதான கூடத்தில் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே உணவு பரிமாறிக்கொள்ளும் 'பஃபே' முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் சாப்பிடலாம். 'கன்வேயர் பெல்ட்' மூலம் உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும்.
பெல்ட் மெல்ல நகரும்போது பக்தர்கள் அதில் உள்ள உணவுகளை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும். அதே நேரம் தேவையில்லாத உணவுகளை தவிர்க்கவும் முடியும். இந்த திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' என்றார்.












Click it and Unblock the Notifications