முதுமலை புலிகள் சரணாலயம்: 25ம் தேதிவரை மூடல்
Subscribe to Oneindia Tamil
முதுமலை: வனவிலங்கு கணக்கெடுப்புப் பணிகளுக்காக முதுமலையில் உள்ள புலிகள் காப்பகம் இன்று முதல் 25ம் தேதி வரை மூடப்படுகிறது.
தமிழக, கேரள மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் சுமார் 321 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது முதுமலை வனவிலங்கு சரணாலயம்.
இந்தாண்டுக்கான வன விலங்கு கணக்கெடுப்புப் பணி இக்காப்பகத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி புலிகள் சரணாலயம் இன்று முதல் மூடப்படுகிறது. வரும் 25ம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் முடிந்ததும், சரணாலயம் வழக்கம் போல் திறக்கப்படு்ம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications