துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு, கண்காட்சி
துபாய்: துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.
இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த யூசுப் எஸ்டேஸ், யாசிர் காதி, இங்கிலாந்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் கிரீன், இந்தியாவைச் சேர்ந்த அஹ்மது ஹமீத், எம்.எம். அக்பர், ஹுசைன் யீ (மலேசியா ), டாக்டர் ஹமீத் ஹுசைன் ( எகிப்து ), சயித் ரகிஆ (கனடா) உள்ளிட்ட சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் இதில் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு 04-3394767 / 04 – 608 7602 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல்: [email protected]/ www.peaceconvention.com


Click it and Unblock the Notifications
