மெரீனா கடற்கரையை அழகுபடுத்த ரூ. 80 லட்சத்தில் நவீன எந்திரங்கள்
சென்னை: மெரீனா கடற்கரையை அழகுபடுத்தவும், கடற்கரையில் சேரும் குப்பைகளை நவீன முறையில் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை மேயர் மா. சுப்பிரமணியன் ஊழியர்களிடம் கொடுத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
கடற்கரை மணலில் இருந்து குப்பையை பிரிக்கும் பணிகளுக்காக மட்டும் ரூ. 33 லட்சம் மதிப்பிலான எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.
சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்காக ரூ. 26.52 லட்சம் மதிப்பிலான 3 சிறிய வகை லோடர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர புல்களை வெட்டி சீராக்கும் லான் மூவர், மரக் கிளைகளை சீர் செய்வதற்காக ட்ரீ ப்ரூனர், பிரஷ் கட்டர், ஹெட்ஜ் ட்ரிம்மர் உள்ளிட்ட கருவிகள் விழாவில் ஊழியர்களிடம் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, மெரீனா நீச்சல் குளத்தில் நுழைவுச் சீட்டு வழங்குவதில் இருந்த குறைபாட்டை போக்குவதற்காக, ரூ. 1.70 லட்சம் மதிப்பில் தானியங்கி நுழைவுச் சீட்டு எந்திரம் மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ளது.
எந்திரத்துக்குள் செலுத்தப்படும் நாணயம் அல்லது ரூபாய் நோட்டுக்கு, சரியான சில்லரை திருப்பி வழங்கப்படும். அச்சடித்து வழங்கப்படும் நுழைவுச் சீட்டில் நேரம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications