சத்தமின்றி ஒரு தீபாவளி!

நாங்குநேரி அருகேயுள்ள கூந்தன்குளத்தில் கிராம மக்கள் பசுமை தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இக்கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.
இதேபோல சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கொல்லுகுடிப்பட்டி கிராமத்திலும் கடந்த 40 வருடமாக மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இந்த கிராமத்தில் தீபாவளி சீசனின்போது பெருமளவில் வெளிநாட்டுப் பறவைகள் வரும். இதனால் இந்த சமயத்தில்பட்டாசு வெடித்தால் அது பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பட்டாசு வெடிப்பதில்லை.
அதேபோல சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்திலும் தீபாவளிக்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. இங்குள்ள மணி அம்மன் கோவிலைச் சுற்றிலும் நிறைய மரங்கள் உள்ளன. இங்கு கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன.
இந்த வவ்வால்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர் இப்பகுதி மக்கள். வவ்வால்களை யாராவது வேட்டையாடவந்தால் துரத்தி விடுகின்றனர்.
இந்த வவ்வால்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், யாரும் இந்த கிராமத்தில் பட்டாசுவெடிப்பதில்லை. தீபாவளி என்றில்லை எந்த விசேஷமாக இருந்தாலும் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!![]()












Click it and Unblock the Notifications