கத்தார் சிறையில் 32 தமிழக மீனவர்கள்-பத்திரமாக மீட்க அரசுகளுக்கு கோரிக்கை
நாகர்கோவில்: கத்தார் நாட்டுசிறையில் 32 தமிழக மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக அடைபட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தார் நாட்டுக் கடல் பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததால் அவர்களை கத்தார் நாட்டு கடலோரக் காவல் படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் 18 பேர் கடையப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். 14 பேர் குமரிமாவட்டம் இனையம், முட்டம், பெரியவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அனைவரும் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர். ஆறு படகுகளில் கத்தார் கடல் பகுதியில் இவர்கள் சென்றபோது கைது செய்யப்பட்டனர். ஜூலை 10ம் தேதி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவிடம் அவர்களது குடும்பத்தினர் சார்பாக கிறிஸ்தவ பாதிரியார் சர்ச்சில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
32 பேரையும் மீட்க அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் ஜெனியா -2 என்ற சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications