மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது
ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.
முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications