நெல்லை கலெக்டர் பங்களாவில் படையெடுத்து வந்த 9 பாம்புகள் பிடிபட்டன
நெல்லை: நெல்லை கலெக்டர் பங்களாவில் கொடிய விஷமுள்ள 9 பாம்புகள் பிடிப்பட்டன. பாம்பாட்டிகளை அழைத்து மகுடி ஊதி அவற்றை பிடித்தனர்.
நெல்லை கலெக்டர் பங்களா பாளை ஐகிரவுண்ட் சாலையில் அமைந்துள்ளது. இந்த பங்களாவை சுற்றியுள்ள பகுதியில் முட்புதர்கள் அதிகம் காணப்படுகிறது.
பங்களாவிற்கு பின்புறம் திறந்த வெளியாக இருப்பதால் மருத்துவக் கல்லூரி பகுதியில் உள்ள பாம்புகள் படையெடுத்து வந்து கலெக்டர் பங்களாவில் குடிபுகுந்து விடுகின்றன. இதையடுத்து பங்களாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்று சுவர் கட்டப்பட்டது. எனினும் பாம்புகள் வருகை நிற்கவில்லை. இரவு நேரங்களில் இரை தேட வரும் பாம்புகளை பார்த்து ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
இதையடுத்து பாம்புகளை பிடிப்பதற்காக நரசிங்கநல்லூரில் இருந்து பாம்பாட்டி நேற்று காலை வரவழைக்கப்பட்டார். அவர் தனது மகுடியை ஊத பாம்புகள் ஒவ்வொன்றாக படையெடுத்து வந்தன. அனைத்தையும் பிடித்து தான் கொண்டு வந்த சாக்கு பையில் பாம்பாட்டி போட்டுக் கொண்டார்.
இந்த பாம்பு வேட்டையில் கொடிய விஷமுள்ள ஒரு கட்டு விரியன், 4 கட்டு விரியன் குட்டிகள், ஒரு நல்ல பாம்பு, 3 சாரை பாம்பு என மொத்தம் 9 பாம்புகள் பிடிக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications