அண்ணா பிறந்தநாள்: பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
2010ம் ஆண்டிற்கான முதல் நிலைப்போட்டிகள் இந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளன.
அதன் தொடர்ச்சியான இறுதிப் போட்டிகள், பள்ளிகளுக்கு அடுத்த மாதம் 2ம் தேதியும், கல்லூரிகளுக்கு 3ம் தேதியும் நடைபெறும்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியருக்கு முதல் பரிசாக தலா ரூ.15,000மும், இரண்டாம் பரிசாக தலா ரு.10,000மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000மும், ஆறுதல் பரிசுகளாக இருவருக்கு தலா ரூ.3,000மும் வழங்கப்படும்.
அண்ணா பிறந்தநாள் விழாவுடன் நடக்கும் முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவார்.
அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் முரசொலி அறக்கட்டளை தலைமை நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் பரிசளிப்பார். அதே போல 3ம் தேதி நடக்கும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் பரிசளிக்கவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications