கோஷ்டி மோதலில் காங்கிரஸார்-தூய மனிதர் கக்கன் நூற்றாண்டு விழாவில் கறை!

காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் கக்கன். நேர்மையானவர், அப்பழுக்கற்றவர், எளிமையானவர் என்று பல புகழ்களுக்குச் சொந்தக்காரர் கக்கன்.
அவரது நூற்றாண்டு விழா மதுரையில் ஜூலை 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மகா எளிமையாக வாழ்ந்து மறைந்த இந்த தலைவரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக, ஒற்றுமையாக, பிரமாண்டமாக கொண்டாட வேண்டிய காங்கிரஸ்காரர்கள் மகா மோசமான முறையில் அணுகி வருகின்றனர்.
வழக்கம் போல,இருப்பதிலேயே பெரிய கோஷ்டியான வாசன் கோஷ்டிதான் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. விழாவை வடக்கு மாசி வீதியில்தான் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
வாசன் கோஷ்டி சொல்லி விட்டால் அது எதுவாக இருந்தாலும் செய்யக் கூடாது என்பதில் மகா தீவிரமாக உள்ள கார்த்தி சிதம்பரம் கோஷ்டியினர், ஒரு படி மேலே போய், மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பந்தல்கால் போட்டு தடபுடலாக கோஷ்டிப் பூசலை கொளுத்திப் போட்டுள்ளனர்.
இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு மறைந்த கக்கனை அசிங்கப்படுத்துகிறார்களே என்று மூத்த காங்கிரஸ் தொண்டர்கள் மனம் புழுங்குகின்றனர்.
அன்றே காங்கிரஸை கலைத்து விடலாம் என காந்தி சொன்னார், யாரும் கேட்கலையே...
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications