மஷேயர் பகுதியில் என்ன வசதிகள்-இந்திய தூதரகம் அறிவிப்பு

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
துல்ஹஜ் 7 இரவு மற்றும் துல்ஹஜ் 8 காலையில் மக்காவிலிருந்து மினா நோக்கி ஹஜ் யாத்ரிகர்களை முஅல்லிம்கள் அழைத்து செல்வார்கள். 8 கிலோ மீட்டர் தூர இப்பயணத்தை சுமார் 20 லட்சம் பேர் ஏறத்தாழ ஒரே நேரத்தில் செய்வர். செல்லும் வழியில் வாகனங்கள் பழுது அடைவதும் உண்டு. ஆகவே இச்சிறு தூரத்தை கடக்க பல மணி நேரங்கள் ஆகலாம். எனவே யாத்ரிகர்கள் பொறுமை காப்பது மிக அவசியம்.
மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒன்றுபோல் இருக்கும். எனவே யாத்ரிகர்கள் தங்களின் முஅல்லிம் எண்களை குறித்து கொள்வது மிக அவசியம். மேலும் கூடாரங்களின் கம்புகளில் குறிக்கப்பட்டுள்ள எண்களையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கூடாரங்களின் அருகில் உள்ள பாலங்களில் இந்திய தேசிய கோடி பறக்க விடப்பட்டிருக்கும். கூடாரங்களில் காணாமல் போவது சாதாரணமாக காணக்கூடியது. ஆகவே யாத்ரிகர்கள் கவனமாக இருப்பது மிக அவசியம்.
மேலும் யாத்ரிகர்கள் சுத்தமற்ற உணவு கடைகளில் இருந்து உணவுகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பழங்களையும், பாதுகாப்பான பிற உணவு வகைகளையும் உட்கொள்வதே சிறந்ததாகும்.
துல்ஹஜ் 8 இரவு மற்றும் துல்ஹஜ் 9 காலையில் மினாவிலிருந்து அரபா மைதானம் நோக்கி யாத்ரிகர்கள் செல்வார்கள். 14 கிலோ மீட்டர் தூர இப்பயணத்தை சுமார் 20 லட்சம் பேர் ஏறத்தாழ ஒரே நேரத்தில் செய்வர். போகும் வழியில் பல காரணங்களுக்காக பயணம் தாமதம் ஆகலாம். எனவே அப்பயணத்தை நடந்தே முடிக்க யாத்ரிகர்கள் தயாராக இருக்க வேண்டும்.
துல்ஹஜ் 9 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் யாத்ரிகர்கள் அரபாவிலிருந்து முஜ்தலிபா நோக்கி புறப்படவேண்டும். அரபாவிலிருந்து முஜ்தலிபா சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு சென்றடைய போக்குவரத்து காரணமாக பல மணி நேரங்கள் ஆகலாம். ஆகவே யாத்ரிகர்கள் இத்தூரத்தை நடந்து கடக்க தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். யாத்ரிகர்கள் இரவை முஜ்தலிபாவில் கழிக்க வேண்டும். இங்கும் தங்க இடம் மிக குறைவே.
முஜ்தலிபாவில் சுபுஹு தொழுகையை முடித்துவிட்டு துல்ஹஜ் 10 காலையில் யாத்ரிகர்கள் மினா நோக்கி மீண்டும் செல்லவேண்டும். இது 6 கிலோ மீட்டர் தூர பயணம் ஆகும். பிற இடங்களை போல் இத்தூரத்தை கடக்கவும் பல மணி நேரங்கள் ஆகலாம். ஆகவே பிற இடங்களை போல் இத்தூரத்தையும் நடந்தே கடக்க யாத்ரிகர்கள் தயாராக இருக்க வேண்டும்.
துல்ஹஜ் 10 அன்று மினாவை அடைந்தவுடன் யாத்ரிகர்கள் ஜமாரத்திற்கு (செய்தானை கல் எறியும் இடம்) செல்ல தங்கள் முஅல்லிம்களை அணுக வேண்டும். முஅல்லிம்கள் கொடுக்கும் நேரத்தில் மட்டும் ஜமாரத்திற்கு சென்று கல் எறியவேண்டும். ஜமாரத்திற்கு செல்லும் போது தங்கள் கைப்பொருட்கள் எதையும் யாத்ரிகள் கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால் ஜமாரத்தில் உள்ள காவலர்கள் கைப்பொருட்களை கைபற்றி குப்பையில் வீசிவிட நேரிடும். நடக்க முடியாதவர்கள் கல் எரியும் பொறுப்பினை வேறொருவரிடம் கொடுக்க வேண்டும். ஜமாரத்தில் சக்கர நாற்காலிக்கு அனுமதி கிடையாது.
முடிவெட்டுவதை அனுமதிக்கப்பட்ட, சுகாதாரமான முடி வெட்டும் கடைகளிலேயே செய்யவேண்டும். அனுமதிக்கப்படாத கடைகளில் முடிவெட்டுவது சுகாதாரமற்றது மற்றுமன்றி சவுதி சட்டங்களுக்கு புறம்பானது. மேலும் மினா பகுதியை யாத்ரிகர்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மினாவில் இருக்கும் காலங்களில் துப்புரவு பணிகள் நடப்பது அரிது.
தகவல்-ஜைனுலாப்தீன், துபாய்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications