பட்டினி ஒழிப்பு... இலங்கை, பாகிஸ்தானை விட இந்தியா படுமோசம்!!

2010-ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்' திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்களாம்.
அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது.
அதேநேரம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியல்படி, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேஷியாவுக்குக் கிடைத்துள்ளது.
84 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39வது இடத்தையும், நேபாளம் பாகிஸ்தான் 57 வது இடத்தைப்பெற்றுள்ளது.
இந்தியாவோ 67வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவு உலகின் எடைகுறைந்த, நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாத உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு 67வது ஆண்டுக்கு நழுவியிருக்கிறது.
பட்டினி ஒழிப்பில் டாப் 9 நாடுகள்:
குவைத், மலேசியா, துருக்கி, மெக்ஸிகோ, டுனீஷியா, நிகாரகுவா, கானா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் சீனா.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications