வெளியான ஒரே நாளில் 2.20 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த ஜார்ஜ் புஷ் சுயசரிதை

இவற்றில் 20 சதவீத நூல்கள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளன. ரேன்டம் ஹவுஸ் என்ற நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் கூறுகையில், ஜார்ஜ்புஷ்ஷின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியான முதல் நாளிலேயே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்கூட்டியே செய்யப்பட்ட ஆர்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் நூல் விற்பனையாகி வருகிறது. முதல் நாளிலேயே 2 லட்சத்து 20 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது எங்களது நிறுவன விற்பனை வரலாற்றில் புதிய சாதனையாகும்.
கடந்த 2004ம் ஆண்டு வெளியான பில் கிளிண்டனின் வாழ்க்கை வரலாற்று நூலான My Life வெளியான முதல் நாளில் 4 லட்சம் பிரதிகள் விற்று பெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ் வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் பதிப்பில் 10.5 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளனவாம். புஷ்வாழ்க்கை வரலாற்று நூல் ஆன்லைன் மூலம் இதுவரை 50,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளனவாம்.
தனது புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் புஷ்.
தான் அதிபராக இருந்த காலத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை சுயசரிதையில் எழுதியுள்ளார் ஜார்ஜ் புஷ். ஈராக் போர் குறித்த முக்கிய முடிவுகள் குறித்தும் இதில் அவர் விவரித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications