அக்டோபர் 15ல் துபாய் முத்தமிழ்ச்சங்கம் நடத்தும் கலைவிழா

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கமும், மெட்ரோ பிலிம் (அபுதாபி-அலய்ன்) மற்றும் ட்ரீம்லேண்ட் டெவலப்பர் (சென்னை-துபாய்) இணைந்து நடத்தும் கலை விழா வரும் 15-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் கராமா இரானியன் கிளப் அருகில் இருக்கும் ஜெம் பிரைவட் ஸ்கூலில் நடக்கிறது.

இந்த விழாவில் இலக்கியம், இன்னிசை, நடனம், பல குரல் போன்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதில் திரு. கிருழ்ணசாமி எம்.பி., உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டு குழுத் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், தமிழர் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவன தலைவர் மருது மோகன், பிரபல திரைப்பட இயக்குநர் பி. வாசு, ஆனந்த் தியேட்டர் நிர்வாக இயக்குனர் இளம்பாரி கருணாகரன், பெப்சி உங்கள் சாய்ஸ் புகழ் உமா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து ராஜாராம் வழங்கும் பல குரல் (மிமிக்ரி) நிகழ்ச்சி, ஜனனி விக்ரம் மற்றும் ஷப்னம் ஷா வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி, பத்மபிரியா, கங்கா ரமேஷ் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அனுமதி இலவசம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+