அப்துல் கலாமுக்கு கார்டு அனுப்பி வாழ்த்து தெரிவித்த 1200 மாணவர்கள்

மொத்தம் 1200 மாணவ, மாணவியரும் தனித் தனியாக போஸ்ட் கார்ட் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்து சாதனை படைத்துள்ளனர்.
இளம் வயதினர் மனங்களில் சுதந்திர உணர்வை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தபால் கார்டு மழையைப் பார்த்து வியந்து போன கலாம், பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியைக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், அடுத்த முறை கேரளாவுக்கு வரும்போது கண்டிப்பாக உங்களது பள்ளிக்கு வராமல் போக மாட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாராம்.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் கேரள மாநிலம் கல்பெட்டா அருகே உள்ள முட்டில் என்ற இடத்தில் உள்ளது. அதன் பெயர் முஸ்லீம் ஆதரவற்றோர் மேல் ஆரம்பப் பள்ளி என்பதாகும். அதன் தலைமை ஆசிரியை வி.ஜே. ரோஸா இதுகுறித்துக் கூறுகையில், ஒவ்வொரு மாணவ, மாணவியும் ஒவ்வொரு விதத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
சிலர் கவிதை வடித்திருந்தனர். சிலர் படம் வரைந்திருந்தனர். சிலர் வெறுமனே பெஸ்ட் விஷஸ் மற்றும் சுதந்திர தின வாழ்த்துகள் என எழுதியிருந்தனர்.
நாட்டு மக்கள் மனதில் குறிப்பாக இளைஞர்கள் மனில் சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தினோம். நாட்டுப்பற்று, இளைஞர்கள் என்று வரும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது அப்துல் கலாம்தான். மேலும் பள்ளிக்குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகனும் கூட. எனவேதான் அவருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்ப முடிவு செய்தோம் என்றார் புன்னகையுடன்.
சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த அட்டைகளை மூட்டையாக கட்டிச் சென்று தபால் அலுவலகத்தில் கொடுத்து போஸ்ட் செய்தனராம்.
முன்கூட்டியே கொடுத்தது நல்லதுதான், இல்லாவிட்டால் அடுத்த சுதந்திர தினத்திற்குத்தான் அது கலாமை சென்றடைந்திருக்கும். நம்ம ஊர் தபால் துறையின் வேகம் சில நேரங்களில் அப்படிதான் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications