ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். ரங்கநாதர் கோவிலில் டிசம்பர் 6ம் தேதி ஏகாதசி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலையில் நடந்தது. 4.10 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், கோவிந்தா கோஷம், ரங்கா கோஷம் முழங்க பக்தர்கள் அதன் வழியாக சென்றனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications