கோவில்பட்டி அருகே பழமையான செப்பு நாணயங்கள் பூமிக்கடியில் கண்டெடுப்பு
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கோவில்பட்டி அருகே உள்ளது இளம்புவனம் கிராமம். இந்த கிராமத்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கோயில் கட்ட தோண்டியபோது சிவலிங்கம் கிடைத்தது. இப்பகுதி மக்கள் அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கண்மாயை சீரமைப்பு செய்தபோது ஆங்கிலேயர் காலத்து செப்பு நாணயங்கள் கிடைத்தன. சிறிய வட்ட வடிவிலான செப்பு நாணயத்தின் ஒரு பகுதியில் 1835 ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு அதன்பின் பகுதியில் மகாவீரர் தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் உருவம் இருக்கிறது.
மேலும் 1911 மற்றும் 1935 ஆண்டு செப்பு நாணயங்களும் இப்பகுதியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இளம்புவனம் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் வெங்கேடசன் என்பவர் இப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது யான தந்தங்களிலான வளையல்கள், மோதிரங்கள், கலைநயமிக்க சிற்பங்கள், காப்புகள், குவளைகள், முதுமக்கள் தாழி, வலம்புரி சங்குகள், சிற்ப வேலைகள் நிறைந்த கைவினை பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இதனை இவர் சேகரித்து வைத்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications