துபாய் ராஸல் கைமா இந்தியப் பள்ளி விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவருக்கு தங்கப் பதக்கம்
துபாய்: துபாய் ராஸல் கைமா பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
துபாயிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா அமீரகம். ராஸல் கைமாவில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியில் இந்தியா, யு.எ.இ. உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2010-11 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இப்பள்ளியில் படித்துவரும் தமிழத்தைச் சோ்ந்த மர்ஜூக் ரஹ்மான் என்ற மாணவரும் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கடந்த 3-ம் தேதி நடந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது மாணவர்களுக்காக நடந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரைச் சேர்ந்தவர்.
பரிசு பெற்ற மாணவரை துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் பொதுச்செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, வி.களத்தூர்.காம் இணைய இதழின் ஆசிரியர் வி.களத்தூர் ஷா, தினமலர் செய்தியாளர் முதுவை ஹிதாயத் மற்றும் பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள் பாராட்டினர்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications