சச்சினின் ரத்தக் கையெழுத்து இடம் பெற்ற சுயசரிதையின் விலை ரூ. 37.5 லட்சம்

இதை சிறப்பு வெளியீடாக கொண்டு வருகின்றனர். இந்த சிறப்பு வெளியீட்டு நூலின் முதல் பக்கத்தில் சச்சின் ரத்தத்தில் ஆன கையெழுத்து இடம் பெறுகிறது.
இந்த ரத்தப் பதிப்பில் முந்தைய பதிப்பில் வெளியாகாத, சச்சின் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நூலை வெளியிடவுள்ளனர். அந்த மாதத்தில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 852 பக்கங்கள் இதில் இருக்கும். தங்க இழையால் நூலின் பக்க ஓரங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமே 10 பிரதிகள்தான் வெளியிடப்படவுள்ளது. இதன் எடை 37கிலோவாக இருக்கும்.
இந்த பத்து பிரதிகளும் இப்போதே புக் செய்யப்பட்டு விட்டனவாம். இதுகுறித்து புத்தகத்தை வெளியிடும் கிரேக்கன் மீடியாவின் தலைமை செயலதிகாரி கார்ல் பெளலர் கூறுகையில், சச்சின் ரத்தத்துடன் கூடியதாக வரும் இந்தப் புத்தகம் சிறப்பானதாக கருதப்படும். சச்சின் ரத்தம் கலந்த அவரது சுயசரிதை என்ற உணர்வு அனைவருக்கும் கிடைக்கும்.
சச்சினின் ரத்தம் கலந்த புத்தகம் என்பதால் இதை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. அனைவரும் சாப்பிடும் சாதாரண டீ அல்ல இது. ஸ்பெஷல் டீ. எனவேதான் பத்து பிரதிகள் மட்டும் வெளியிடுகிறோம் என்றார்.
இது மட்டும் இல்லையாம், சச்சினிடம் உமிழ்நீரை கேட்டுள்ளனராம். அதை டிஎன்ஏ சோதனைக்குக் கொடுத்து அதன் வரைபடத்தையும் அந்த நூலில் பிரசுரிக்கப் போகிறார்களாம்.
இந்த பத்து புத்தகங்களின் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை மும்பையில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்காக கொடுக்கப் போகிறார்களாம்.
இந்த சிறப்பு பதிப்போடு, டெண்டுல்கர் ஓபஸ் சுயசரிதையின் வழக்கமான நூல்கள் ஆயிரத்தையும் வெளியிடவுள்ளனராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications