தஃபாரெஜ்-ஜித்தா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்பு
ஜித்தா: சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் ஆண்டுதோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 22ம் தேதி தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' நிகழ்ச்சி ஹோட்டல் இம்பாலாவில் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமோசா, கட்லெட், பழங்கள், பழச்சாறு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக ஜித்தா தமிழ் மன்றம், ஜெட்டா தமிழ்ச் சங்கம், கிரிட், மெப்கோ மற்றும் ஐஎப்டி ஆகிய அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
மாஸ்டர் மர்வான் கிராஅத்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சாலிஹ் மரைக்கார் வரவேற்புரை அளித்தார். இதையடுத்து பிரபல பேச்சாளர் “ஷேக் வஜ்டி அக்காரி" ரமலான் மாதத்தின் சிறப்புப் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து இஸ்லாம் பற்றிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது.
கிரிட் அமைப்பின் தலைவர் ஓ.பி.ஆர். குட்டி, ஐஎப்டி ஜனாப். சித்திக் மதனி, ஜெட்டா தமிழ்ச் சங்கம் ஜம்போ மோகன், ஜித்தா தமிழ் மன்றம் அன்புமணி, ஹோப் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் துணைத் தலைவர் (கல்வி) ஷபிகுர் ரஹ்மான் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தையும் பற்றி பேசியதோடு, தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையையும் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக ஜாபர் சாதிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஷாஜஹான் நன்றியுரை வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications