நீலகண்டன் வேலு குருப், அக்லக் கானுக்கு ஞானபீட விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது, மலையாள கவிஞர் நீலகண்டன் வேலு குருப் மற்றும் உருது கவிஞர் அக்லக் கான் ஷார்யார் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
2007ம் ஆண்டுக்கான இந்த விருதை மலையாள கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான ஒட்டபிலாவில் நீலகண்டன் வேலு குருப் பெறுகிறார். ஞானபீட விருது பெறும், 5வது மலையாளி இவர் ஆவார்.
இவர் ஏற்கனவே பத்மஸ்ரீ விருதையும், சிறந்த சினிமா பாடலுக்காக தேசிய விருதையும், 13 கேரள அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
2008ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு உருது கவிஞர் அக்லக் கான் ஷார்யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications