பாளையங்கோட்டை சிறையில் 44 பேர் பல்கலைக் கழக தேர்வு எழுதினர்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் 44 பேர் பல்கலைக் கழகத் தேர்வு எழுதினர்.
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறையை விட இந்த சிறையில்தான் கல்வியில் ஆர்வம் உள்ள கைதிகள் அதிகம் உள்ளனர். இதனால் பாளையங்கோட்டை சிறை கல்வியில் முதலிடம் வகித்து வருகிறது.
இங்கு படித்து பட்டம் பெற்ற சிலர் வெளியில் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக சிறைதுறை வரலாற்றில் முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சிறைவாசிகளுக்கு இங்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
வளர் கல்வி திட்டம்,செயல்முறை விரிவாக்கப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் எழுத படிக்க கற்றுக் கொண்ட கைதிகள் தற்போது வீட்டிற்கு கடிதம் எழுதி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மூலம் கார் பழுது பார்த்தல், ரெப்ரிஜிரேடர் பழுது பார்த்தால் பட்டய பயிற்சியை 13 கைதிகள் முடித்துள்ளனர்.
பிரகலநாதன் என்ற ஆயுள்கைதி, நெல்லை பல்கலைக் கழகம் மூலம் எம்.பி.ஏ. படித்து வருகிறார். 2 கைதிகள் எம்.பில் படிப்புக்கு ஆய்வு கட்டுரை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சிறையி்ல் உள்ள 44 கைதிகள் இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வுகளை எழுதினர். இத்தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் வரை நடந்தது.
தேர்வுக்கான தலைமை கண்காணிப்பாளராக சிறை கண்காணிப்பாளர் அறிவுடை நம்பியும், பார்வையாளராக புனித ஜான்ஸ் கல்லூரி பேராசிரியர் ஜெய்சுந்தர்சிங், தேர்வுக் கூட கண்காணிப்பாளராக இருதய அரசு, செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications