தேய்பிறை அஷ்டமியில் ஆடிப்பெருக்கு: புதுத் தாலிக் கயிறு மாற்றலாமா என்று பெண்களுக்கு சந்தேகம்
சென்னை: ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் விசேஷமாக கொண்டாடப்படும் ஒன்று. அந்த நாளில் புது மணப் பெண்கள் புது தாலிக் கயிறு கட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு தேய்பிறை அஷ்டமி நாளன்று வருவதால் புது மணப்பெண்கள் புதுத்தாலி மாற்றுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து பிரபல வாஸ்து பேராசிரியரும், ஜோதிடருமான யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது,
ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று வரும் தேய்பிறை அஷ்டமியை காலாஷ்டமி என்பர். இந் நாளில் தான் ஆடிப்பெருக்கு வருகிறது. அன்று பரணி நட்சத்திரமாக இருப்பதாலும், சந்திரன் என்ற வீட்டின் அதிபதி செவ்வாயும், பரணி நட்சத்திற்கு சொந்தக்காரரான சுக்கிரனும் சனியோடு கூடி கன்னி ராசியில் இருப்பதாலும், குரு 7-ம் பார்வையாக மூவரையும் பார்ப்பதாலும் இந்நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கிறது.
ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக் கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக் கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால் தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள் சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது. எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு பலன்களை தரும் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications