குளச்சல் வெற்றித் தூணுக்கு 31-ம் தேதி நினைவு தினம்: ராணுவ வீரர்கள் வீரவணக்கம்
குளச்சல்: குளச்சலில் 269 ஆண்டுகளுக்கு முன் டச்சு படையை தோர்கடித்த திருவிதாங்கூர் படை வீரர்களின் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித் தூணுக்கு வரும் 31-ம் தேதி இரண்டாவது முறையாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
கிபி 18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் குளச்சல் கடற்கரையில் கப்பல் வழியாக டச்சு படை வந்தது. அப்படையை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படை தோற்கடித்து வெற்றி வாகை சூடியதின் நினைவாக போர் நடந்த குளச்சல் துறைமுகக் கடற்கரையில் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி மன்னர் மார்த்தாண்ட வர்மா விக்டரி பில்லர் எனும் வெற்றித் தூணை நிறுவினர்.
சுமார் 20 அடி உயரத்தில் திருவிதாங்கூர் அரசு முத்திரையான சங்கு சின்னத்தை மகுடமாக தாங்கி நிற்கும் ஒரே கல்லினால் ஆன இந்த வெற்றித் தூணுக்கு வரும் 31-ம் தேதியுடன் 269 வயது நிறைவடைகிறது.
வெற்றித் தூணின் நினைவு தினத்தை முன்னி்ட்டு வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி கேரள மாநிலம் பாங்கோடு ராணுவ முகாமை சேர்ந்த 16-ம் மெட்ராஸ் கமாண்டோ படையின் ராணுவ வீரர்கள் வெற்றித் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
அதே போன்று இந்த ஆண்டும் வரும் 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் திருவிதாங்கூர் மாங்கோடு ராணுவ முகாமை சேர்ந்த ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். இதற்கு முன்னேற்பாடாக கடந்த 24-ம் தேதி 15 ராணுவ வீரர்கள் வெற்றித் தூண் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தனர்.
வீரவணக்கத்தில் திருவிதாங்கூர் உத்தரடாம் திருநாள் மார்த்தாண்ட மகாராஜா வர்மா, ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் தேவாரம், ராணுவ அதிகாரிகள், குமரி மாவட்டத்தின் அரசு உயர் அதிகாரிகள், குளச்சல் நகராட்சி சேர்மன் ஜேகையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications