சபரிமலை கோயிலில் 5 கோடி பக்தர்கள் தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த சீசனில் சுமார் 5 கோடி ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேற்றும் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்துக்காக வந்தனர். 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை குறித்து சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், 'பக்தர்களுக்கு தூய்மையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
மகர ஜோதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இது வரை 14 லட்சம் அரவணைப் பிரசாதம் விற்பனையாகி உள்ளது. மகர ஜோதியை முன்னிட்டு 4 லட்சம் கூடுதல் அரவணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பக்தர்களுக்கு சபரிமலையில் இன்னும் பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது. பக்தர்களுக்கு தங்கும் விடுதி சபரிமலையில் அமைக்க முடியாத காரணத்தினால் அதற்குப் பதில் வேறு இடத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.
மலையேற முடியாத பக்தர்களுக்கு தமிழகத்தில் பழனி கோவிலில் இருப்பது போல் ரோப்-கார் வசதி செய்ய திட்டம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications