துபாயில் அண்ணா நூற்றாண்டு விழா- பொங்கல் விழா
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதிக்குப் பாராட்டு மற்றும் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழாவினை வருகிற 29ம் தேதியன்று கொண்டாடவுள்ளது.
அன்று மாலை 5.30 மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் விழா நடைபெற இருக்கிறது என துபாய் தமிழ்ச் சங்க தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விழாவிற்கு வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
விழாவில் பங்கேற்க விரும்புவோர் அனுமதிச் சீட்டுகளைப் பெற துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் (050 5787657)மற்றும் பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா (050 467 4399) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என துபாய் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சி.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
[email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications