வங்கதேசத்தில் உள்ள ஜோதிபாசுவின் பூர்வீக இல்லம் நூலகமாகிறது

வங்கதேசத்தில் உள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரோடி கிராமத்தில் ஜோதிபாசுவின் பூர்வீக இல்லம் உள்ளது. இங்குதான் ஜோதிபாசுவின் தந்தை பிறந்தார். இந்த பகுதி அப்போது கிழக்கு வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வங்கதேசம் உருவான போது இந்தப் பகுதி அந்த நாட்டுடன் சேர்ந்து விட்டது. இது டாக்காவுக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஆகும்.
தனது தந்தை நிஷிகாந்த் பாசு பிறந்த இந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார் ஜோதி பாசு. ஆனால் அதற்கான வாய்ப்பே அமையாமல் போய், இறுதி வரை அவரது ஆசை நிராசையாகிப் போனது.
இந்த நிலையில் இந்த வீட்டை தற்போது நூலகமாக மாற்ற வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இது ஜோதிபாசுவின் கடைசி ஆசைகளில் ஒன்றாகும்.
இதுகுறித்த உறுதிமொழியை வங்கதேச நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அளித்தார்.
ஜோதிபாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் மீது வங்கதேச நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் ஹசீனா உள்ளிட்டோர் பேசினர்.
உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஹசீனா பேசுகையில், ஜோதிபாசு ஒரு முதுபெரும் அரசியலவாதி மட்டுமல்ல, துணைக் கண்ட அரசியலின் மாபெரும் காப்பாளரும் கூட. அவரது மரணத்தால் இந்தியா மாபெரும் தலைவர் ஒருவரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை இழந்துள்ளது.
வங்கதேசம் தனது மிகச் சிறந்த நலம் விரும்பியை இழந்துள்ளது. எனக்கு இது தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். நல்லதொரு பாதுகாவலரை நான் இழந்துள்ளேன் என்றார் ஹசீனா.
இல்லத்தின் கதை...
நாராயண் கஞ்ச் மாவட்டம், பரோடி கிராமத்தில் உள்ள 2 மாடிகளைக் கொண்ட அந்த பாழைடந்த வீடு ஜோதிபாசு குடும்பத்தின் பெருமைகளைப் பறை சாற்றிக் கொண்டு அமைதியாக நிற்கிறது.
ஜோதிபாசுவின் மறைவுச் செய்தியால் இந்தக் கிராமத்தில் சோகம் காணப்படுகிறது. ஜோதிபாசு குடும்பத்தினரின் அருமை, பெருமைகளை ஊர் மக்கள் மிகப் பெருமையாக கூறுகின்றனர்.
ஜோதிபாசுவின் இளமைக் காலத்தின் ஒரு பகுதி இந்த வீட்டில்தான் கழிந்தது.
2.04 ஏக்கர் பரப்பளவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. 2 மாடிகளைக் கொண்ட மிக அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட புராதன கட்டடம் இது.
இந்த வீடு தற்போது 75 வயதாகும் ஷாஹிதுல்லா என்பவரின் பராமரிப்பில் உள்ளது. இங்கு தனது குடும்பத்தினருடன் ஷாஹிதுல்லா வசித்து வருகிறார். இவருடைய தாயார் அயத்துன்னிசாதான், ஜோதிபாசு குழந்தையாக இருந்தபோது பார்த்துக் கொண்டாராம்.
ஜோதிபாசுவின் தந்தை நிஷிகாந்த் பாசு ஒரு டாக்டர் ஆவார். இவரை இப்பகுதியினர் என்கே பாசு என்று அழைப்பார்கள். அவருடைய மனைவி பெயர் ஹேமலதா. இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.
இந்த வீட்டில் 1942 வரை பாசு குடும்பத்தினர் வசித்தனர். பின்னர் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
கொல்கத்தாவுக்குப் போன பின்னரும் கூட என்.கே.பாசு இந்தக் கிராமத்திற்கு அடிக்கடி வருவார், ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாராம். தந்தை வரும்போது கூடவே ஜோதிபாசுவும் வருவாராம்.
பாசுவின் தாயார் ஹேமலதா மறைந்த பின்னர் ஜோதிபாசுவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அயத்துன்னிசாவிடம் வந்தது. வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பு ஷாஹித்துல்லாவுக்கு வந்தது.
தற்போது ஜோதிபாசுவின் உறவினர்கள் யாரும் இங்கு இல்லை.
மேற்கு வங்க மாநில முதல்வராக ஜோதிபாசு இருந்தபோது, 1987ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி ஒரு முறையும், பின்னர் 1997ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி என இரண்டாவது முறையும் வங்கதேசத்திற்கு வந்தார் ஜோதிபாசு. அந்த பயணத்தின்போது தனது பூர்வீக கிராமத்திற்குச் சென்று மக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications