தி.க.சி.க்கு பாரதிய இலக்கிய விருது

உலக தமிழ் சிற்றிதழ்கள் சங்க 5வது மாநாடு வரும் 21ம் தேதி குற்றாலம் திருவிதாங்கூர் அரண்மனையில் நடைபெறுகிறது.
மாநாட்டில் மூத்த படைப்பாளாருக்கான பாரதிய இலக்கிய விருது தி.க.சிவசங்கரனுக்கும், மூத்த இதழாளருக்கான வல்லிக்கண்ணன் இதழியல் விருது இலங்கையை சேர்ந்த அந்தனி ஜீவாவுக்கும் வழங்கப்படுகிறது.
பதியம்-குதிரை குறும்பட விருது திரைப்பட இயக்குனர் ராஜமோகனுக்கும், பெண் படைப்பாளருக்கான அவ்வை இலக்கிய விருது சென்னையை சேர்ந்த அரங்கமல்லிகாவுக்கும், தமிழ்தாய் அறக்கட்டளை விருது இலங்கையை சேர்ந்த ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கும் அளிக்கப்படுகிறது.
அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவை விருது இலங்கையை சேர்ந்த செங்கதிர் ஆசிரியர் கோபாலகிருஷ்ணனுக்கும், இனியமனா இலக்கிய விருது இலங்கையை சேர்ந்த ஜீவநதி ஆசிரியர் காலமணி பரதனுக்கும் வழங்கப்படுகிறது.
கருதகேவலி இலக்கிய விருது (தாவர உணவை பி்ன்பற்றும் இதழ்) திருப்பத்தூர் சித்தர்பீடம் ஆசிரியர் வெங்கடாசலத்துக்கும், களம் இலக்கிய விருது சென்னையை சேர்ந்த உரத்த சிந்தனை ஆசிரியர் உதயம்ராமிற்கும் வழங்கப்படுகிறது.
சிகரம் இலக்கிய விருது வத்தலகுண்டு மகாகவி ஆசிரியர் வதிலை பிரபாவிற்கும், நாகம்மாள் நினைவு இலக்கிய விருது திருத்துறைப்பூண்டி கிழக்கு வாசல் ஆசிரியர் உத்தம சோழனுக்கும் அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications