சேலம் அருகே ஆற்றில் 3 புராதான சிலைகள் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே ஆற்றில் தூர்வாரிய போது மிகப் பழமையான மூன்று ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

ஓமலூர் அருகே தாத்தியம்பட்டி கிராமத்தில் மேற்கு சரபங்கா ஆற்றி்ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றின் மையப் பகுதியில் தூர்வாரும்போது வித்தியாசமான சத்தம் கேட்டது. இதையடுத்து கைகளால் மண்ணை அப்புறப்படுத்தி பார்த்தபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் இருந்தன.

இதையடுத்து அந்தத் தொழிலாளர்கள் சிலைகளை தாத்தியம்பட்டி கோவிலுக்கு கொண்டு சென்று வழிபாடு நடத்தினர். இதையறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாசில்தார் ராமகிருஷ்ணன் அங்கு விரைந்து சிலைகளை தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

ஆனால், தங்கள் கிராமத்தில் கிடைத்த சிலைகள் தங்களின் மூதாதையர்கள் வணங்கிய தெய்வமாகத்தான் இருக்கும். ஆகவே இந்த சிலைகள் எங்கள் கிராமத்திற்கு தான் சொந்தம் என தாசில்தாரிடம் மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி 3 ஐம்பொன் சிலைகளையும் மீட்ட தாசில்தார் அவற்றை ஓமலூர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+