உயரம் குறைந்த பெற்றோருக்குப் பிறந்த ஆரோக்கிய குழந்தை-தாய், தந்தை மகிழ்ச்சி
சென்னை: உயரம் குறைவான தம்பதிக்கு அழகான,ஆரோக்கியமான, இயல்பான குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்தத் தம்பதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அருகே சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் 3 அடி 8 அங்குலம் உயரம் உடையவர். வயது 31. இவருடைய கணவர் கந்தசாமி. இவரும் உயரம் குறைவானவரே.
உயரம் குறைந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் திலகவதி கர்ப்பமடைந்தார். கூடவே கவலையும் பிறந்தது. உயரம் குறைந்த நமக்கு எப்படி குழந்தை பிறக்குமோ என்ற கவலை அது.
நிறைமாக கர்ப்பிணியான திலவதியை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் சேர்த்தார் கந்தசாமி. அங்கு அவருக்கு அழகான ஆரோக்கியமான, இயல்பான குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.7 கிலோவாக உள்ளது.
அதை விட ஆச்சரியமாக சுகப் பிரவசமாக குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் திலகவதி. குழந்தை நன்றாக இருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திலகவதி-கந்தசாமி தம்பதியினர்.
இதுகுறித்து பிரவசம் பார்த்த டாக்டர் விஜயா கூறுகையில், திலகவதி மிகவும் உயரக் குறைவாக இருந்ததால் குழந்தை எப்படி இருக்குமோ என்று நினைத்தோம். ஆனால் மற்ற குழந்தைகளைப் போலவே திலகவதியின் குழந்தையும் இருந்தது. மற்ற குழந்தைகளைப் போல் இதுவும் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications