துபாயில் நகைச்சுவையாளர் மன்ற சிறப்புக் கூட்டம்

தமிழ்ப்பிரிவின் சிறப்புக் கூட்டத்தை நிறுவனப் புரவலர் குணா துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் சுரேஷ் நகைச்சுவையாளர் மன்றம் துவங்கப்பட்டதன் நோக்கம் உள்ளிட்டவற்றை விவரித்தார்.
சௌம்யலட்சுமி துவக்கமாக பாடல் பாடினார்.
சிறப்பு விருந்தினர்கள் செந்தில் குமார், 89.5 எஃப்.எம். பண்பலையின் நிர்வாகி கிரிஷ் ஆகியோர் நகைச்சுவையின் அவசியம், நகைச்சுவையினை வெளிப்படுத்தும் விதம் ஆகியன குறித்து உரை நிகழ்த்தினர். சிறுவர்கள் தங்களது நகைச்சுவையினை வெளிப்பட்டுத்திய விதம் குறித்தும் பெருமிதம் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராபர்ட் பாடல் பாடினார்.
வர்ஷிகா, நெல்லை, கோகுல், வெங்கட், சுப்பிரமணி, தர்ஷன், ஷான், ரிஷி, மீனாட்சி, ஷர்மிளா யுவராஜ், விஷால் ஆகியோரது நகைச்சுவைகளினால் அரங்கில் சிரிப்பலைகள் எழுந்தன. நிகழ்வில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications