பசுமை இல்லாத ஊரில் நன்மை இருக்காது-ஜக்கி வாசுதேவ்

ஈஷா அறக்கட்டளை சார்பில், பசுமை கரூர் இயக்கம் , கரூரில் துவங்கியது. இந்த துவக்க விழாவில், கரூரில் 10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை ஈஷா யோக மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவக்கி வைத்து பேசுகையில்,
கண்ணில் சிவப்பு இல்லாவிட்டால், ஆரோக்கியம் இருக்காது என்று மருத்துவ உலகில் கூறப்படுகின்றது. உலகில் பசுமை இல்லாவிட்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
தண்ணீர், மண் அனைத்தும் பொருள் இல்லை, வாழ்வின் அடிப்படை. இதை புரியாமல் வாழும் தன்மை தற்போது உள்ளது.
இங்கிருந்து மண் ஏற்றுமதியாகிறது. அதனால் பூமி தாய்க்கு எந்த பிரச்னையும் இல்லை. நமக்கு தான் பிரச்னை.
பூமி பசுமை இழந்தால், நாம் நலமாக வாழமுடியாது என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தேவை. அதற்கு போதனை தேவையில்லை.
செடி, மரம், பாறை என அனைத்து இயற்கையை போற்றி வணங்க வேண்டும் என நமது கலாச்சாரம் சொல்கின்றது. ஆனால், அதை நாம் மறந்து விட்டோம்.
நம் ஊரை பசுமையாக வைப்பது மகத்தான பணி அல்ல. அதை விளையாட்டாக கூட செய்து முடிக்கலாம்.
ஒவ்வொரு சுப, அசுப நிகழ்ச்சியிலும் மரக்கன்று வைக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சியிலும் மரக்கன்று நடுவதை வழக்கமாக்க வேண்டும் என்றார்.
நிகழ்சியில், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், கரூர் வைஸ்யா வங்கி மேலாண்மை இயக்குனர் குப்புஸ்வாமி, லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர் வி.எஸ்.ரெட்டி, டி.என்.பி.எல். பொது மேலாளர் மணி உள்பட பல முக்கிய விஐபி-க்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications