For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவ 21-ல் குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் லட்சார்ச்சனை விழா துவங்கியது

Google Oneindia Tamil News

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை துவங்கியது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பாடப்பெற்ற புன்னியத் தலமாகும். மேலும், இது நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வார். அவ்வாறு அவர் இடம் பெயரும் நாளில் குரு பெயர்ச்சி விழா கொண்டாடப்படுகிரது.

இந்த ஆண்டு வரும் 21-ம் தேதி குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த விழையொட்டி ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகர், ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர், ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ ஏலவார்குழலி அம்மன் உள்ளிட்ட சந்நதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X