வெயில்: ராஞ்சியில் காலை 6.30 மணிக்கே திறக்கும் பள்ளிகள்!
ராஞ்சி: வெயில் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கும் முன்பே நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது.
குளிர் பிரதேசங்களிலும் கூட இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை சற்று கூடுதலாக நிலவுகிறது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஒரிசாவில் மட்டும் 28 பலியாகி உள்ளனர். மேலும் வெபப்பகால நோய்களுக்கு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு விவசாயம், சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றின் வேலை நேரத்தை அம்மாநில அரசு மாற்றி அமைத்தது.
இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பள்ளி நேரத்தை மாற்றியமைத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோடைக்கு முன்பே வெயில் கொளுத்துவதால், கோடை விடுமுறை துவங்கும் வரை பள்ளிகள் இனி காலை 6.30க்கே துவங்கிவிடும் என ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக மதியம் 2.30 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக, முன்னதாகவே 11 மணிக்கெல்லாம் வகுப்புகளை முடித்துக்கொண்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications