கண்ணகி வாழ்ந்த இடங்களில் கதை சொல்லும் சுற்றுலா

Subscribe to Oneindia Tamil

Kannagi Statue
கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த இடங்களில் கதை சொல்லும் சுற்றுலா பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலக கதை சொல்லும் நிலையமும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து இந்தச் சுற்றுலாவை நடத்துகின்றன.

கண்ணகி நடந்து சென்ற,​​ மற்றும் வாழ்ந்த இடங்கள் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் சுற்றுலா நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 22ம் தேதி சென்னையில் தொடங்கி பூம்புகார்,​​ மதுரை,​​ வால்பாறை ஆகிய பகுதிகளில் சுற்றுலா நடைபெறும்.​

சுற்றுலாவின்போது அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே வழக்கத்தில் உள்ள கண்ணகி பற்றிய கதைகள்,​​ நம்பிக்கைகள்,​​ மத நம்பிக்கைகள்,​​ ஐதீகங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குறிஞ்சி,​​ முல்லை,​​ மருதம்,​​ நெய்தல்,​​ பாலை ஆகியவற்றின் வழியே பயணம் மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் எரிக் மில்லரை 98403 94282 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.​

மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் செல்லலாம்..​

www.storytellinginstitute.org

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+