கீரிப்பாறை -வனப்பகுதியில் 150 ஏக்கருக்கு பெரும் காட்டு தீ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வனப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவுக்கு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள வனப்பகுதியில் தேக்கு, சந்தனம், ஈட்டி, ரப்பர், மூங்கில் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரங்கள், மூலிகைகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையின் வால்பகுதி என்று குமரி மாவட்ட வனப்பகுதிகளை அழைப்பர். வனச் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடந்தது.
புலிகள், சிறுத்தை புலிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இங்குள்ள வனப்பகுதியில் வசிப்பது கண்டறியப்பட்டது.
தற்போது கோடை காலம் என்பபதால், காடுகளில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளால் விலை உயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் எரிந்து நாசமாகி வருகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் களியல், குலசேகரம் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு காடுகள் அழிந்தன.
கடந்த 3 நாட்களுக்கு முன் கீரிப்பாறை வனப்பகுதியில் தீ பிடித்து எரிய தொடங்கியது. வெள்ளி மாலை வனப்பகுதி முழுவதும் கொழுத்து விட்டு எரிந்தது. மூங்கில் மரங்கள் ஓன்றொடு ஓன்று உரசி தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 150 ஏக்கரில் தீ பரவியது. மூங்கில் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சாம்பலானது. நேற்று காலையிலும் தொடர்ந்து தீ கொழுத்து விட்டு எரிந்தது. தீயணைப்பு துறையினரோ, வனத்துறையினரோ உள்ளே நுழைய முடியாத அடர்ந்த காட்டு பகுதியில் தீயை அணைக்க முடியவில்லை.
இந்த தீ விபத்துக்கான சேதம் மதிப்பீடு பற்றி இன்னும் அதிகாரிகள் தரப்பில் உறுதியாக தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications